தமிழ் மன்றம்

தன்னலத்தைத் தகர்க்கின்ற தமிழவளின் தாய்மடியில் தவழ்ந்தாடும் தலைமகனாய்
தனித்துவமாய்த் தழைக்கின்ற செந்தமிழின் செல்வமிது

படவரி பதிவுகளைக் காண
தமிழ் மன்றம்
shape shape இயல்

இயல்

சீறுகின்ற சீர்கள்-தம்
சினத்தினை சீர்செய்ய
சிறப்பான தொடைகொண்டும்
சிலிர்க்கச்செய்யும் அணி கொண்டும்
செருக்கோடு சொல்லும் நம்
செவிக்கான செய்திகளே
செந்தமிழின் இயற்றமிழாம்.

shape shape இசை

இசை

தாளமெனும் தாயோடு
இயலென்னும் சேய்பேசி
இருதயத்தை ஆட்கொள்ளும்
இணையற்ற தாய்மொழியின்
இதழ் போன்ற தேன்தமிழே
இணையில்லா இசைத்தமிழாம்.

shape shape நாடகம்

நாடகம்

உள்ளம் தனை உருக்குகின்ற
உலகத்தின் உணர்வுகளெல்லாம்
உயிர்த்ததடி உன்னுருவில்
உயர்ந்திருக்கும் நாடகத்தமிழாய்.

மன்ற செயல்பாடுகள்

நமது தமிழ் மன்றம் கடந்த கல்வி ஆண்டு 2019-2020 இல் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் பிற கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றுள்ளன.

76

உறுப்பினர்கள்

12

போட்டிகள்

127

பரிசுகள்

shape

குறளெடு குரல்கொடு

இரண்டு அடியில் உலக வாழ்வியலை அறியச் செய்த வள்ளுவனின் பொதுமறையாம் திருக்குறளின் பெருமையை உணர்த்தும் வகையில் 2010 ஆம் ஆண்டு துவங்கி ஆண்டுதோறும் குறளெடு குரல்கொடு எனும் தலைப்பில் ஒரு அதிகாரம் அல்லது குறளை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்று வருகின்றது.

குறளெடு குரல்கொடு

இலக்கிய விருந்து

ஆண்டுதோறும் இலக்கிய ஆர்வமுடைய பள்ளி மாணவ மாணவியருக்காகத் தமிழ் மன்றம், ELS Club மற்றும் Quiz Club இணைந்து பல போட்டிகளை நிகழ்த்தி வருகிறது. அந்நிகழ்ச்சியில் தமிழ் மன்றம் சார்பாக நடைபெற்ற பேச்சு, கவிதை முதலிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளும் சிறப்பாகப் பங்கேற்ற ஒரு பள்ளிக்கு ஒட்டுமொத்த வெற்றியாளர் பரிசும் வழங்கப்படுகிறது.

இலக்கிய விருந்து
shape
shape

இளந்தளிர்

2018 ஆம் ஆண்டு துவங்கி ஆண்டுதோறும் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் தனித்துவத்தையும் தமிழ் ஆர்வத்தையும் வெளிக்கொணர்வதற்காக பல்வேறு கலை இலக்கிய போட்டிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறும் மாணாக்கர்களுக்குப் பதக்கங்களுடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இளந்தளிர்

பொங்கல் விழா

காலம் கண்டு வியந்த தமிழனின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் தித்திக்கும் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டு துவங்கி ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாப்பட்டு வருகின்றது. அன்று துறை வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையே பொங்கல் விழா சிறப்புப் போட்டிகளான பொங்கல் வைக்கும் போட்டியும் உறியடி போட்டியும் நிகழ்த்தப்படும். அவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் தமிழ் மன்ற மாணாக்கர்களின் சிலம்பம் மற்றும் பறையிசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

பொங்கல் விழா
shape
shape

யாளி

2019ஆம் ஆண்டு துவங்கி ஆண்டுதோறும் இரு தினங்கள் நடைபெறும் மறத்தமிழனின் மண்வாசம் மாறாப் போட்டிகள். முதல் நாள் கல்லூரிக்குள்ளேயான கலை இலக்கிய போட்டிகள் மற்றும் தமிழ் ஆர்வமுடைய மாணாக்கர்கள், ஆசிரியர்களின் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறும். இரண்டாம் நாள் நடைபெறும் கல்லூரிகளுக்கிடையிலான கலை இலக்கிய போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளின் தமிழ் ஆர்வமுடைய மாணாக்கர்கள் பங்கேற்று பரிசுகளை வென்று செல்வர். அன்று சிறப்புடன் செயல்பட்டு பல பரிசுகளை வென்ற ஒரு கல்லூரிக்கு ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பையும் வழங்கப்படும்.

யாளி